விஜய் சேதுபதி பட நடிகை வீட்டில் ஏற்பட்ட இழப்பு! அவரே வெளியிட்ட சோகமான தகவல்!

death father nandita tamilactress
By Jai Sep 20, 2021 09:59 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் குமுதா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நந்திதா ஸ்வேதா. இதையடித்து அட்டக்கத்தி, எதிர்நீச்சல், தேவி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து படங்கள் நடித்துவந்து பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தி வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக பதிவுகள் போட்டு வருகிறார். இப்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் நந்திதா ஸ்வேதா ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார்.

அதில் என்னவென்றால் 54 வயதாகும் அவரது தந்தை சிவசாமி அவர்கள் உயிரிழந்துள்ளாராம். இதனை அவர் பதிவு செய்ய ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.