இன்ஸ்டா பிரபலத்திடம் பேரம் பேசினாரா நயன்தாரா? அதிர்ச்சி தகவல்
நயன்தாரா
இன்று தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர், நயன்தாரா.
கடந்த ஆண்டு நயன்தாரா அவர் தொடங்கிய பெமி 9 என்ற நாப்கின் நிறுவனம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தன் கணவருடன் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களை அழைத்திருந்தார்கள்.
இந்த இன்ஃப்ளூயன்ஸர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் புகைப்படங்கள் எடுக்கும்போது ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நயனையும், விக்னேஷையும் பார்த்து இவர்கள் நார்மல் பீப்பிள் இல்லை என்று கூறும் வீடியோ அதிக அளவில் ட்ரெண்டானது.
பேரம் பேசினாரா நயன்தாரா?
சூழல் இப்படி இருக்க அந்த நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகள் குறித்து Adipoli Foodie என்ற பிரபலமான இன்ஸ்டா ஐடியிலிருந்து வீடியோ ஒன்று போடப்பட்டிருந்தது. ஆனால், சில மணி நேரத்திலேயே அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது.
அதன் பின், அந்த ஐடியை வைத்திருப்பவர் புதிய வீடியோ ஒன்று வெளியிட்டு, " நயன்தாரா தரப்பிலிருந்து அந்த வீடியோவை டெலிட் செய்துவிடுங்கள். எங்கள் தயாரிப்புக்கு கெட்ட பெயர் வந்துவிடும்.
இரண்டு வாரங்களுக்கு என்ன வருமானம் வருமோ அதனை தருகிறோம்" என்று கூறியதாகவும். அவர் அதை மறுக்க, ஸ்ட்ரைக் அடித்து அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டதாகவும்" அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.