அதுதான் வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு!! வெளிப்படையாக பேசிய நயன்தாரா..

Nayanthara Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 20, 2024 06:34 AM GMT
Report

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. சமீபகாலமாக இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகிறது.

தற்போது நயன்தாரா, மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார். சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் இயக்கத்தில் உருவாகும் டியர் ஸ்டூண்ட்ஸ் என்ற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக சொல்லப்படுகிறது.

அதுதான் வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு!! வெளிப்படையாக பேசிய நயன்தாரா.. | Actress Nayanthara Open Talk

இந்நிலையில் நயன்தாரா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், "கஜினி திரைப்படத்தில் நடித்ததுதான் என்னுடைய வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு என்று கருதுகிறேன். அந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னிடம் சொல்லப்பட்டபடி காட்டப்படவில்லை".

"அந்த திரைப்படத்தில் சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். இதனை நான் புகாராக சொல்லவில்லை, இந்த விஷயத்தை எனது வாழ்க்கையில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.