46 வயது!! திருமணமே வேண்டாம்.. நடிகை கௌசல்யாவின் முடிவுக்கு இதுதான் காரணமா?
கௌசல்யா
தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்களில் ஒருவர் கௌசல்யா. கிளாமர் ரூட் பக்கம் செல்லாமல் மிகவும் ஹோம்லியாக நடித்து மக்களின் மனதை வென்றவர்.
'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற படத்தின் வெற்றியால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். அதன் பின், நேருக்கு நேர், ஜாலி, பிரியமுடன், சொல்லாமலே, உன்னுடன், வானத்தைப் போல, ஜேம்ஸ்பாண்ட், மனதை திருடி விட்டாய் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்த இவர் தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
46 வயதாகும் கௌசல்யாவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
இதுதான் காரணமா?
அதில், "சினிமாவில் பிஸியாக இருந்தபோது நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், ஆனால் சில காரணங்களால் அது திருமணத்தில் முடியாமல் போனது.
அதனால் இப்போது வரை குடும்பம், குழந்தை என பெரிய பொறுப்பை என்னால் சிறப்பாக கையாள முடியுமா என தெரியவில்லை. இப்போது வரை நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" என கூறியுள்ளார்.