ஸ்கூல் ஃபீசுக்கே காசில்லை!! இப்போது 800 கோடி மதிப்பு பங்களாவுக்கு சொந்தக்காரியான நடிகை..
800 கோடி பங்களா
ஒரு காலத்தில் கல்வி கட்டணத்துக்கே காசில்லாமல் இருந்து, தற்போது டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து 800 கோடி மதிப்பிலான பங்களாவில் வாழ்ந்து வருகிறார் ஒரு நடிகை. அவர் வேறு யாருமில்லை நடிகை கரீனா கபூர் தான்.
1980ல் பிறந்த கரினா கபூர் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக தற்போது திகழ்ந்து வருகிறார். அவரது சகோதரி கரிஷ்மா கபூரும் ஒரு நடிகை தான். சமீபத்தில் அவர் தந்தை ரந்தீர் அளித்த பேட்டியில், தனது இரு மகள்களின் பள்ளிக்கட்டணத்தைக்கூட கட்ட முடியாமல் கஷ்டப்பட்டதாக கூறியிருந்தார்.
கரீனா கபூர்
கரீனா கபூர் அளித்த பேட்டியில், நாங்கள் பாரம்பரிய திரையுலக குடும்பத்தை சார்ந்து இருந்தாலும், ஒரு காலக்கட்டத்தில் நாங்கள் வறுமையில் இருந்தோம் என்றும் அப்போது என் சகோதரி கரிஷ்மா லோக்கல் டிரைன் மற்றும் பேருந்துகளில் கல்லூரிக்கு சென்று வந்தார்.
அப்போது பொருளாதார சிக்கலில் இருந்தோம் என்று கூறியிருந்தார். அப்படி கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்த கரீனா கபூர், தற்போது 800 கோடி மதிப்புள்ள பங்களாவில் வாழ்ந்து வரும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார். தற்போது நடிகை கரீனா கபூர், ஒரு படத்துக்கு மட்டும் ரூ.10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.