45 வருட சினிமா வாழ்க்கை!! நடிகைகளை அடிக்க வைத்த பாரதிராஜா என்னை அடிச்சிருந்தா.. பிரபல நடிகை

Gossip Today Bharathiraja Tamil Actress Actress
By Edward Aug 03, 2023 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று புகழப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. தற்போது இருக்கும் மூத்த முன்னணி நடிகர், நடிகைகள் பாதி பேர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தி பிரபலமானவர்கள் தான்.

பாரதிராஜா பெரும்பாலும் தன்னுடைய படங்களில் நடிக்கும் கலைஞர்களுக்கு நடிப்பு வரவில்லை என்றால் அடித்து அதை வரவைப்பார். அப்படி அவரிடம் அடிவாங்காத நடிகைகள் யாரும் இருக்க முடியாது என்று கூறுவார்கள்.

அப்படி பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அறிமுகமாகியவர் தான் நடிகை வடிவுக்கரசி. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் நம்ம இயக்குனருடன் (பாரதிராஜா) ஒரு குறும்படம் நடிச்சிருக்கிறேன், இன்னொரு படமும் பண்ணப்போகிறேன்.

அப்போது கூட அவரிடம் சொன்னேன், 45 வருட சினிமா வாழ்க்கையில் பல நடிகைகளை என்னை வைத்து அடிக்க வைத்தார் பாரதிராஜா, ஆனா எந்த நடிகையும் அவருடன் பேர் பண்ணவில்லை. நான் தான் உங்களுடன் நடிக்கிறேன்.

சின்ன கேரக்டரில் உங்களிடம் நடிக்க ஆரம்பித்ததால் தான் நான் இன்னைக்கு சாப்பிடுறேன் என்று கூறியிருக்கிறார். என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா, அவர் இல்லை என்றால் இது ஆரம்பமே இல்லை.

எவ்வளவு தான் சண்டை போட்டாலும் என்னை அடிக்காமல் இருந்திருக்கிறார். அவர் அடிச்சிருந்தால் இதைவிட பெரிய இடத்தில் இருந்திருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.