கேரவன் உடை மாற்ற மட்டுமே, வேறு விஷயங்களுக்கு வேண்டாம்.. நடிகை அம்பிகா உடைத்த விஷயம்
Ambika
Tamil Cinema
Actress
By Bhavya
அம்பிகா
80களில் நாயகியாக அறிமுகமாகி தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா.
பல நடிகைகளை போல திருமணம் செய்து சினிமாவிற்கு எண்ட் கார்ட்டு போடாமல் தொடர்ந்து நடிக்கிறார். சின்னத்திரையிலும் பிஸியாக நடித்து வருபவர் சன் தொலைக்காட்சியில் அருவி தொடரில் நடித்தார்.
அதை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் மல்லி என்ற தொடரில் நடிக்கிறார்.
உடைத்த விஷயம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அம்பிகா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " அப்போது எல்லாம் கேரவன் என்பது கிடையாது. கேரவன் என்ற வார்த்தையை கூட கேட்டது இல்லை. இன்றைக்கு கேரவன் இருப்பது நல்லது தான்.
நடிகர் மற்றும் நடிகைகள் ஆடைகள் மாற்ற என பல வசதிகள் உள்ளது. ஆனால், அதற்கு மட்டும் கேரவனை பயன்படுத்தினால் மிகவும் நல்லது" என்று தெரிவித்துள்ளார்.