ராதிகா என் அம்மா இல்லை.. வரலட்சுமி என்ன இப்படி சொல்லிட்டாரு
வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். போடா போடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தாலும் அதற்கு முன்பே ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களை சில காரணங்களால் மிஸ் செய்துள்ளார்.
முதல் படமே அவருக்கு வெற்றிக்கொடுக்க அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது பல மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வருகிறார்.
தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை கடந்த ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவரது பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வரலட்சுமி பதில்
அதில், " என் அம்மா என்றால் அது சாயா தேவிதான். ராதிகாவை நான் ஆன்ட்டி என்று தான் அழைப்பேன். அவர் எனக்கு அம்மா கிடையாது. அனைவருக்கும் ஒரு அம்மா தான் இருக்க முடியும்.
அது போன்று தான் எனக்கும் ஒரு அம்மா தான். நான் ராதிகாவை அம்மா என்று அழைக்காவிட்டாலும் எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது.
இதற்கு பலர் நெகடிவ் கமெண்ட் கொடுப்பார்கள். ஆனால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. குரைப்பவர்கள் குரைத்துக்கொண்டே தான் இருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.