11 வருடத்துக்கு பின் தாயான பத்மப்ரியா!! ஒரு வருஷமா ரகசியமா வளர்க்க இதான் காரணமா?
தாயான பத்மப்ரியா
சினிமாவில் களமிறங்கும் நடிகைகள் தொடர்ந்து படங்கள் நடிப்பது இல்லை. கிடைக்கும் தரமான கதைகளில் நடித்துவிட்டு உடனே திருமணம் என செட்டில் ஆகி விடுகிறார்கள். அப்படி தமிழில் தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் என பல படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

கடைசியாக பத்மப்ரியா தங்க மீன்கள் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2014ம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் நண்பர் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் ஆகி 10 வருடம் குழந்தை இல்லாதவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பத்மப்ரியா குழந்தை பிறந்து 1 வருடம் கழித்து இந்த விஷயத்தை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை அபிராமி அவருக்கு வாழ்த்து கூறிய நிலையில், அவர் திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

அப்படி இருக்கையில் பத்மப்ரியா, காரணமே நீதான் என பதிவிட்டு இருப்பதால், பத்மப்ரியாவும் அபிராமியை போல் குழந்தையை தத்தெடுத்து தாயாகி இருக்கிறாரா? என்ற விவாதம் சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது.