ஜாலி மோடில் விஜய்யுடன் நடிகை பூஜா எடுத்த புகைப்படம்.. வைரலாகும் பதிவு
தளபதி 69
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இதற்கு முன் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யின் ஜோடியாக பூஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல், மலையாள சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ என பல நட்சத்திரங்கள் நடித்து வரும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவு
இதில், '2024ஆம் ஆண்டுக்கான கடைசி படப்பிடிப்பு, #T69" என விஜய் மற்றும் தன்னுடைய கால்கள புகைப்படத்தை எடுத்த பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#T69 pic.twitter.com/KYB1xdLgg3
— Alex (@alex_q20) December 20, 2024