33 வயதில் தொழிலதிபர் போட்ட வலை.. ரகசிய திருமணம் செய்து துபாயில் செட்டிலாகிய நடிகை..

Indian Actress Actress Poorna
By Edward Oct 26, 2022 08:33 AM GMT
Report

பூர்ணா

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூர்ணா. ஷாம்னா கசீம் என்ற பெயரை சினிமாவில் பூர்ணாவாக மாற்றி நடித்து வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து வந்த பூர்ணா சில ஆண்டுகளுக்கு முன் ஆசிப் அலி என்பவருடன் நட்பாகி பின் நிச்சயமும் செய்தார்.

ஆனால் இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு எந்த பதிலும் கூறாமல் வந்த பூர்ணா, அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

33 வயதில் தொழிலதிபர் போட்ட வலை.. ரகசிய திருமணம் செய்து துபாயில் செட்டிலாகிய நடிகை.. | Actress Poorna Marriage In Dubai Mappillai

ரகசியமாக திருமணம்

தற்போது துபாயில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமண புகைப்படத்தை வெளியிட்ட பூர்ணா துபாயில் செட்டிலாகிவிட்டாராம். அங்கு எப்படியாவது நடனப்பள்ளி ஒன்றினை ஆரம்பிப்பது என தனது ஆசையாக பூர்ணா கூறியுள்ளாராம்.