திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கர்ப்பத்தை அறிவித்த சீரியல் நடிகை ப்ரீத்தி - கிஷோர்
Pregnancy
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
ப்ரீத்தி குமார் - கிஷோர்
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ப்ரீத்தி குமார். தெய்வம் தந்த வீடு, தமிழ் செல்வி, நெஞ்சம் மறப்பதில்லை, சுந்தரி நீயும் சுந்தரி நானும் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.
தற்போது புனிதா என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் ப்ரீத்தி குமார், கடந்த ஆண்டு பசங்க பட நடிகர் கிஷோரை 2023ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், கர்ப்பமாக இருப்பதை ப்ரீத்தி குமார் - கிஷோர் தம்பதியினர் அறிவித்துள்ளனர்.
தன் கணவருடன் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி இந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள்.