பணமில்லாமல் கணவரை காப்பாத்த முடியாத நிலை!! இரண்டாம் கல்யாணத்தை நினைத்து பயப்படும் நடிகை பிரேம பிரியா..
தமிழ் சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து காமெடி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை பிரேம பிரியா. வடிவேலுவுடன் சில படங்களில் இணைந்து நடித்து வந்த பிரேம பிரியாவிற்கு சில வருடங்களாக பல சோகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்பா, மாமனார், கணவர் என்று அடுத்தடுத்த மரணங்கள் பிரேம பிரியாவை தனிமையில் கொண்டு சென்றதாக சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். நடிகை ஷகீலா எடுத்த பேட்டியில் கலந்து கொண்ட பிரேம பிரியா, கணவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு கால் எடுக்கும் நிலைக்கு சென்றார்.
அதன்பின் பணமில்லாமல் காப்பாத்த முடியாமல் போய் இறந்துவிட்டார். என்னை பாசமுடனும் பார்த்து வந்தார் கணவர் என்று தெரிவித்துள்ளார்.
அப்படி பாசம் வைத்தவர் பெட்சிட்டை மூடிட்டு ஏன் அடிப்பார் என்று ஷகீலா கேட்டிருக்கிறார். நான் அழுதா தாங்கமுடியாதுன்னு தான் அப்படி அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
வேறேதும் திருமணம் செய்ய பிளான் இருக்கா என்று கேட்டதற்கு அப்படியொரு ஐடியா இல்லை, ஒருத்தர் கேட்டிருக்கிறார், இப்போது வேண்டாம்னு இருக்கேன், பயமா இருக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
வருபவர் எப்படி ஏற்றுக்கொள்வார், என்னால் என் பெண்ணுக்கு பிரச்சனை வரக்கூடாது என்று பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறார்.