வீடியோ, ஆடியோ மூலம் காசு சம்பாதிக்கும் விக்ரம் பட நடிகை!! வாய்ப்பில்லாமல் எடுத்த முடிவு!
நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ஜெமினி. இப்படத்தின் மூலம் வட இந்திய நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வின்னர், வில்லன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இதன்பின் உடல் எடையை எற்றியதால் வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார். இடையில் உடல் எடையை பாதி குறைத்து போட்டோஷூட் என இணையத்தில் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டார்.
அதுவும் செட்டாகவில்லை என்று எல்லைமீறிய படி வீட்டில் இருப்பதை அப்படியே இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது, சற்றும் யோசிக்காமல் தனியாக ஒரு வெப்சைட்டை உருவாக்கி, அதில் ஆடியோ, வீடியோ, புகைப்படம் என வெளியிட்டு காசு சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.

தன்னுடன் நேரடியாக சந்தித்து பேச 1.5 லட்ச ரூபாயும், 10 நிமிடம் தொலைபேசியில் பேச 15 ஆயிரம் ரூபாயும், நேரடி மெசேஜ் செய்ய 2 ஆயிரம் ரூபாயும் வாங்க திட்டமிட்டுள்ளார்.
மேலும், இதற்கான பதிவு கட்டணமாக 49 ரூபாயும் இன்பாக்ஸில் 2 சிறப்பு புகைப்படத்திற்கு ரூ. 999, 25 நிமிடம் வீடியோ காலுக்கு 30 ஆயிரமும் 15 நிமிடத்திற்கு 13 ஆயிரம் என்று லிஸ்ட்டை போட்டுள்ளார். இதை பார்த்த பலர் என்ன இப்படியொரு முன்னேற்றம் என்று ஷாக்காகி வருகிறார்கள்.