திருமணமாகாமலே காதலருடன் நெருக்கம்!! நடிகை பிரியா பவானி சங்கரின் ரொமான்ஸ் புகைப்படங்கள்..
செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்த முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பின் மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், இந்தியன் 2, டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
பிரியா பவானி சங்கர், ராஜ் வேல் என்ற நீண்டநாள் நண்பரை காதலித்து வருகிறார். அவருடன் அவிட்டிங், டின்னர் என்று சென்று வரும் பிரியா, சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா பவானி சங்கர் ராஜ் வேலை காதலிக்கும் முன்பு வேறொருவரை காதலித்ததாகவும் ராஜ் வேலும் வேறொருவரை காதலித்ததாகவும் அவரே கூறியிருக்கிறார்.
தற்போது காதலர் ராஜ் வேல் பிறந்தநாள் அன்று ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அவருடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.