அடக்கவுடக்கமான நடித்த நடிகை பிரியங்கா மோகனா இது!! கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்கள்..
இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் பிரியங்கா மோகன். கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக பிரியங்கா மோகனின் அசத்தலான, அழகான நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது. அதன் பின் டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது They Call Him OG, Saripodhaa Sanivaaram என்ற தெலுங்கு படங்களிலும் ஜெயம் ரவியின் பிரதர் என்ற படத்திலும் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான் ஆடையில் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வந்தார்.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி அப்படியே ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். தற்போது நீலநிற ஆடையில் ரசிகர்களை சுண்டி இருக்கும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





