எனக்கு எத்தனை புருஷன் இருந்தா உனக்கென்ன!! கொந்தளித்த நடிகை ரிஹானா..
நடிகை ரிஹானா
சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரிஹானா, சமீபகாலமாக சிக்கல்களில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட தனக்கு தாலிக்கட்டி தொழிலதிபர் ஏமாற்றிவிட்டதாக கூறி வந்தார். மேலும் பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருக்கும் பணத்தை மோசடி செய்வதுதான் அவன் வேலை என்பதை தெரிந்து கொண்டேன்.
அவனிடம் என் பணம் மாட்டிக்கொண்டதால், நடித்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கினேன். திருமணம் செய்து கொண்டதாக வந்த போட்டோ என்னை ஏமாற்றி எடுத்த போட்டோ என்று ரிஹானா தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றி, தான் ஆன்லைனில் வாங்கிய சேலை கிழிந்தபடி இருந்ததால் இன்ஸ்டாகிராமில் புகாரளித்தேன். அதற்கு எந்தவிதமான பதிலும் வராததால் மீண்டும் லட்சுமி புட்டிக்கின் புடவை விளம்பரத்தை பார்த்து மீண்டும் 5 புடவைகள் ஆர்டர் செய்தேன்.
இந்த முறையும் வந்த புடவையிலும் டேமேஜ்கள் இருந்ததால் வீடியோவாக வெளியிட்டேன். பின் அந்நிறுவனத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு, இந்த புடவைக்கு பதில் வேறொரு புடவை அனுப்புகிறோம். அந்த வீடியோவை டெலீட் செய்யுங்கள் என்றனர்.
அதற்கு நான் வேறொரு புடவையை அனுப்புங்கள், அதன்பின் டெலீட் செய்கிறேன் என்று சொல்லியும் அதன்பின் வந்த புடவையிலும் ஓட்டைகள் இருந்தது.

எத்தனை புருஷன் இருந்தா உனக்கென்ன
பின் என்னை தொடர்பு கொண்ட அந்நிறுவனத்தில் ஒருவர், நீங்கள் வேண்டுமென்றே எங்களுடைய நிறுவனத்தின் பெயரை கெடுக்கிறீர்கள் என்று கூறியதுமட்டுமின்றி, ஆபாசமாக ரீல்ஸ் போடுகிறீர்கள் இந்த வீடியோ குழந்தைகள் பார்க்க முடியுமா என்றும் ஒரு கணவரோடு வாழும் பெண்கள் ரீல்ஸ் போட மாட்டார்கள்.
பல கணவரோடு வாழ்பவர்கள் தான் ரீல்ஸ் போடுவார்கள் என்று பேசினார். நான் டிக் டாக் இலக்கியா போல் உடம்பை காட்டி ஆபாசமாக ரீல்ஸ் போடுகிறேனா? ஒரு புடவை விற்கும் நிறுவனம் புடவைப்பற்றி யாராவது குறை கூறினால், அதைப்பற்றி மட்டும்தான் பேச வேண்டும்.
அதைவிட்டுவிட்டு உனக்கு எத்தனை புருஷன் என்று ஆபாசமாக கேட்கலாமா? இவர்கள் டார்ச் அடித்து பார்த்தார்களா? தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பேசுவதற்கான காரணம் என்ன, அந்த நபர் பேசிய அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் உரிய பதிலளிக்காமல் அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்று ரிஹானா பேசியுள்ளார்.