போதும்டா சாமி..இன்னொன்னு வேறயா!! மறுமணம் குறித்து அதிர்ச்சியான நடிகை பிரியங்கா...
நடிகை பிரியங்கா
சினிமாப் படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை பிரியங்கா. முன்னணி நடிகர்கள், காமெடி நடிகர்களுடன் நடித்த பிரியங்கா, சமீபத்தில் குழந்தை இருக்கும் நிலையில், கணவரை விவாகரத்து செய்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
போதும்டா சாமி
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இன்னொரு திருமணம் செய்ய முடிவு செய்யலாமே என்ற கேள்விக்கு அதிர்ந்துபோய் ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். அதில், ஒன்னே போதும்டா சாமி, ஒன்னுக்கே இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் கல்யாணம் வேண்டாம்னு இருக்கும், இதுல இன்னொன்னு வேறயா.
கல்யாணமாகி ரெண்டு பொண்ணுங்க இருக்கும்போது எனக்கு எதுக்கு கல்யாணம். அஞ்சு வீட்டுக்காருடன் நடிக்கத்தான் செஞ்சேன், உண்மையில் கட்டிப்பேனா என்ன?.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கல்யாணம் பண்ணமாட்டேன், என் பொண்ணுங்களுக்கே கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு நினைக்க தோணுது. என்று சிரித்தபடி நடிகை பிரியங்கா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.