நடிகர் கமலால் சினிமாவில் இருந்து ஓட்டம் பிடித்த நடிகைகள்.. இத்தனை பேரா
இந்திய சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்துள்ளார். கமலின் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல ஹீரோயின்களுடன் கிசுகிசுப்பட்டுள்ளார்.
கமல் நடிப்பில் 2004 -ம் ஆண்டு வெளியான விருமாண்டி படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது வரை இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். இப்படத்தில் சில காட்சிகளில் இருவரும் நெருக்கமாக நடித்திருப்பார்கள்.
இப்படத்திற்கு பின்னர் அபிராமி சில படங்களில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி சென்றார்.
1991 -ம் ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் குணா. இதில் ஹிந்தி நடிகை ரோஷினி நடித்திருப்பார். இப்படத்தில் இவர் கமலுடன் நெருக்கமான முத்த காட்சிகளில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பின்னர் ரோஷினியும் சினிமாவில் இருந்து விலகினார் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.