நடிகை ராஷி கண்ணாவுக்கு அடித்த ஜாக்பாட்.. குஷியில் ரசிகர்கள்

Raashi Khanna Tamil Cinema Actress
By Bhavya Jul 22, 2025 08:30 AM GMT
Report

ராஷி கண்ணா

மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ராஷி கண்ணா. பின், நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர்.

அதை தொடர்ந்து, அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழன், துக்லக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் நடித்தவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

நடிகை ராஷி கண்ணாவுக்கு அடித்த ஜாக்பாட்.. குஷியில் ரசிகர்கள் | Actress Raashi Next Project Update

அடித்த ஜாக்பாட்

தென்னிந்திய திரை உலகில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது ராஷி கண்ணாக்கு ஜாக்பாட் அடித்தது போன்று பவன் கல்யாண் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள "உஸ்தாத் பகத்சிங்" என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். அதில், ஒரு நாயகியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.   

நடிகை ராஷி கண்ணாவுக்கு அடித்த ஜாக்பாட்.. குஷியில் ரசிகர்கள் | Actress Raashi Next Project Update