அந்த காட்சிகளை விட இதைதான் ஈஸியாக செய்துமுடிப்பார்! சில்க் ஸ்மிதா பற்றி உருகிய பிரபல நடிகை..

radha tamilactress silksmitha
By Edward Sep 25, 2021 11:10 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் பல நடிகைகள் க்ளாமர் ரோலுக்கென்றே உரிய முகபாவணைகளை வைத்து கொடிக்கட்டி பறந்து வந்த நடிகைகள் பலர். அந்த வரிசையில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கனவுக்கன்னி என்ற பெயரை எடுத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அந்தகாலகட்டத்தில் இருந்த நடிகைகளே அவரை பெற்றி நடிப்பை புகழ்ந்து பேசுவார்கள். அப்படிப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா 450 படங்களில் நடித்துள்ளார்.

1996ல் செப்டம்பர் 23ல் அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து சடலாமாக மீட்கப்பட்டார். தற்கொலைக்கு என்ன காரணம் என்ற உண்மை மர்மமாகவே தற்போது இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சில்க் ஸ்மிதா மரணமடைந்து நினைவு நாளான செப்டம்பர் 23ல் அவர் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகி வருகிறது. பலருக்கும் உதவி மறைமுகமாக உதவி செய்துள்ளார் சில்க் ஸ்மிதா. அவர் பற்றி சில உண்மை விஷயத்தை நடிகை ராதா உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

என்னுடைய முதல் படத்தில் நடித்திருந்தார். கிளாமர் காட்சிகள் எவ்வளவு ஈஸியாக நடிப்பாரோ அந்த அளவிற்கு எமோஷ்னல் காட்சிகளையும் அசால்ட்டாக நடிக்க கூடியவர். அவரை போன்ற ஒரு நடிகையை இழந்தது கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார். எந்த கதாபாத்திரமானாலும் சரி மேக்கப் இல்லாமல் நடிக்கக்கூடிய நடிகையாக திகழ்ந்தவர் என்றும் கூறியுள்ளார் ராதா.