கருப்பையில் கட்டி... நடக்க கூட முடியாமல் போராடும் பிரபல நடிகை
ராக்கி சாவந்த்
பிரபலமாக வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை செய்து பிரபலமான நடிகைகள் பாலிவுட்டில் அதிகம் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ராக்கி சாவந்த்.
இவர் படு மோசமாக கிளாமர் உடை அணிவது, சர்ச்சை விஷயங்கள் பேசுவது என மக்களிடம் பிரபலமானார்.
2019 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரான ரித்தேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார், சில காரணங்களால் விவாகரத்து பெற்றார்.
இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு ஆதில் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் ஆதில், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது நிர்வாண வீடியோவை ஆதில் பல கோடிக்கு விற்றுவிட்டதாக புகார் கூறினார்.
இந்த நிலையில் வயிற்று வலியால் துடித்த ராக்கி சாவந்திற்கு கருப்பையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் அவருக்கு ஆபரேஷன் செய்தனர். அறுவை சிகிச்சை முடிந்து ஒருவாரமான நிலையில், மருத்துவர்கள் அவருக்கு நடை பயிற்சி கொடுக்கின்றனர்.
நடக்க கூட முடியாமல் அவர் மிகவும் கஷ்டப்பட்டு அழுகிறார்.