15 வருடங்கள்.. நடிகை ரம்பா வீட்டில் நடந்த விசேஷம்!! இது புதுசா இருக்கே
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் 90-ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. இவர் சுந்தர். சி இயக்கத்தில் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மாபெரும் வெற்றி பெற்றது.
பின், அருணாச்சலம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக ரம்பா நடித்திருப்பார். அதை தொடர்ந்து, ரம்பா நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.
பிறகு, திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார் நடிகை ரம்பா. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக இருந்தவர்.
பல வருடங்களுக்கு பிறகு அவர் தற்போது விஜய் டிவியில் ஒரு டான்ஸ் ஷோவில் அதாவது Jodi Are U Ready Season 2 - ல் நடுவராக பங்கு பெற்றுள்ளார்.
நடந்த விசேஷம்!
இந்நிலையில் ரம்பா தனது கணவர் உடன் நிச்சயதார்த்தம் ஆகி 15 வருடங்கள் ஆவதை கொண்டாடி இருக்கிறார். தற்போது கணவர் உடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்,