கையில் சிகரெட்..ராஜமாதா சிவகாமி தேவியா இது!! அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்..
ரம்யா கிருஷ்ணன்
தென்னிந்திய சினிமா 80 காலக்கட்டத்தில் அறிமுகமாகி தனக்கான ஒரு இடத்தை பிடித்து கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் எப்படி நீலாம்பரியாக மிரட்டினாரோ, பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக வேறொரு பிம்பத்தை காட்டினார்.
தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ராம் கோபால் வர்மாவின் சமூகவலைத்தள பக்கத்தில் இதுதான் ரம்யா கிருஷ்ணனின் புதிய லுக் என்று ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
அந்த லுக்கில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்தும் கையில் சிகரெட் பிடித்தவாறு இருக்கும் லுக் தான் அது.
போலிஸ் ஸ்டேஷன் மே பூத் என்ற புதிய ஹாரர், திரில்லர் படத்தின் லுக் தான் அது என்றும் இப்படத்தில் மனோஜ் பாஜ்பாய், ஜெனிலியா தேஷ்முக் என பலர் நடிக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


