ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ் ரகசியம்?.. இது தெரியாம போச்சே!
ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என கொண்டாடப்பட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய மூன்று திரைப்படங்களும் பான் இந்தியன் ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்துள்ளது.
ஃபிட்னஸ் ரகசியம்?
இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ராஷ்மிகா அவரது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், " காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பேன். டயட்டீஷியன் தந்த ஆப்பிள் சைடர் வினிகரை, தண்ணீர் குடித்த பிறகு எடுத்துக்கொள்வேன்.
இப்போதுதான் சைவத்திற்கு மாறினேன். சாதம் அதிகம் சாப்பிடுவதில்லை. இரவு உணவு மிகவும் குறைவாகவே எடுத்து கொள்வேன்.
தக்காளி, உருளைக்கிழங்கு, வெள்ளரி, குடைமிளகாய் போன்ற காய்கறிகளால் அலர்ஜி உள்ளது. மேலும், தினமும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.