35 வயதில் குறையாத கிளாமர்!! நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் க்யூட் புகைப்படங்கள்..
ரெஜினா கசாண்ட்ரா
சென்னையில் பிறந்த ரெஜினாவின் தந்தை ஆங்கிலோ இந்தியன் என்று கூறப்படுகிறது. சென்னை பல்கலைகழகத்தில் சைக்காலஜி படித்த ரெஜினா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.

கடந்த 2005ல் கண்ட நாள் முதல் பட்த்தின் மூலம் அறிமுகமாகி அழகிய அசுரா, சூர்யா காந்தி போன்ற கன்னட படத்திலும் நடித்து அறிமுகமாகினார். 2012ல் சிவா மனசுலோ ஸ்ருதி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகினார்.
அறிமுகமாகி பல ஆண்டுகள் கழித்து 2013ல் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் தான் ரெஜினாவிற்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தமிழில் மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சுலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, காஞ்சூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்த ரெஜினா, மீண்டும் அஜித்தின் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன் தாராவுடன் நடித்தும் வருகிறார்.
தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறர் ரெஜினா..






