கார், பங்களா, 11 லட்சம் சம்பளம்!! 23 வயதில் நடிகையை 3வது மனைவியாக்க அழைத்த பிரபலம்..

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Jan 15, 2026 04:30 AM GMT
Report

நடிகை எமி நூர் தினிர்

மலேசியாவை சேர்ந்த பிரபல நடிகை எமி நூர் தினிர், அழகி போட்டியில் கலந்து கொண்டு பிரபலமானார். அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் பங்கேற்ற எமி நூர் தினிர் கூறிய சில விஷயம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் அவர், பொதுவாக கார்ப்பரேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது சமூகத்தி செல்வாகான நபர்களிடமிருந்து எனக்கு அடிக்கடி தொந்தரவுகள் ஏற்படும். சிலர் என் தொலைபேசி நம்பரை கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

கார், பங்களா, 11 லட்சம் சம்பளம்!! 23 வயதில் நடிகையை 3வது மனைவியாக்க அழைத்த பிரபலம்.. | Actress Reject Vvip Offer Shocking Revealed

சிலர், வேறு வகையில் அழுத்தம் கொடுப்பார்கள். சிலர் நீங்க ப்ரீயா? வெளியில் செல்லலாமா? என்று கேட்பார்கள். ஆனால் நான் சொல்லும் இந்த சம்பவம் முதன்முறையாக எனக்கு நடந்தது.

3வது மனைவி

சமூகத்தில் விவிஐபி அந்தஸ்தில் இருக்கும் பிரபலம் அவர். கடந்த 2019ல் எனக்கு 23 வயதாக இருக்கும்போது நான் அழகி போட்டிகளில் தீவிரமாக இயங்கி வந்தேன். அப்போது அந்த விவிஐபி தரப்பில் என்னை அணுகினர்.

உங்களுக்கு கார், பங்களா, 10 ஏக்கர் நிலம், மாதம் ரூ.11 லட்சம் பணம் கொடுக்கப்படும், அதற்கு ஈடாக ஏற்கனவே திருமணம் முடிந்த அந்த விவிஐபிக்கு 3-வது மனைவியாக இருக்க வேண்டுமென கூறினர். அந்த நபருக்கு என்னுடைய தந்தை வயது இருக்கும். ஆனால், உன்னை நான் விற்கமுடியாது என என்னுடைய தாய் கூறிவிட்டார்.

கார், பங்களா, 11 லட்சம் சம்பளம்!! 23 வயதில் நடிகையை 3வது மனைவியாக்க அழைத்த பிரபலம்.. | Actress Reject Vvip Offer Shocking Revealed

வசதி படைத்த கணவர் கிடைப்பது என்பது போனஸ்தான். ஆனால் அவர் ஒரு இரும்பு மனிதர் போல் இருந்தால் கூட நான் ஓகே சொல்லியிருப்பேன், ஆனால் அவர் பார்ப்பதற்கு தாத்தா போல் இருக்கிறார். உடல் சார்ந்த வசீகரமும் இல்லை, திருமணத்தில் எல்லாமும் முக்கியமாக இருக்கிறது.

எனக்கு இது தேவையில்லை என நிராகரித்துவிட்டேன். ஆனால் நான் விரும்பிய பாதை அதுவல்ல, சரியான முறையில் பணம் சேர்த்து பெற்றோரை கவனிக்க வேண்டும் என நான் விரும்பினேன் என்று நடிகை எமி நூர் தினிர் தெரிவித்துள்ளார்.