17 வயதில் முதல் திருமணம், 35 வயதில் 2ம் திருமணம்..பலரும் பேச தயங்கும் விஷயத்தை பேசிய ரேகா நாயர்
Indian Actress
Tamil Actress
Actress
Rekha Nair
By Dhiviyarajan
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரேகா நாயர், வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குடும்ப கஷ்டம் காரணமாக 17 வயதிலேயே திருமணம் செய்துகொண்டாராம். 18 வயதில் இருக்கும் போதே இவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பே அவருடைய கணவர் சில காரணங்களால் பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து பல கஷ்டங்களை சந்தித்து வந்த இவர் 35 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம்.
பலரும் குடும்ப விஷயங்களை பேச தயங்கும் நிலையில் ரேகா நாயர் வெளிப்படையாக பேசியுள்ளார்.