ஆர்யாவுடன் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா! இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா

Arya
By Kathick Apr 25, 2024 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக இருக்கும் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கலாபக் காதலன்.

இப்படத்தில் ஆர்யாவின் ஜோடியாக பிரபல நடிகை ரேணுகா மேனன் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் 2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த நம்மல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் தமிழில் முதன் முதலில் நடித்த திரைப்படம் பிப்ரவரி 14. இதன்பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாஸ் மற்றும் ஆர்யாவின் கலாபக் காதலன் திரைப்படங்களில் நடித்தார்.

ஆர்யாவுடன் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா! இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா | Actress Renuka Menon Family

நடிகை ரேணுகாவிற்கு 2006ஆம் ஆண்டு சுராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இவர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். ஆம், 2006ஆம் ஆண்டிற்கு பின் ரேணுகா மேனன் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

ரேணுகா மேனன் - சுராஜ் தம்பதிக்கு இரு பெண் பிள்ளைகள். இந்த நிலையில், தனது கணவர் மற்றும் மகள்களுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் ரேணுகா.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ஆர்யாவுடன் கலாபக் காதலன் திரைப்படத்தில் நடித்த நடிகை ரேணுகாவா இது என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

ஆர்யாவுடன் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா! இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா | Actress Renuka Menon Family