படத்திற்காக அந்த மாதிரி செய்த ரகுவரன்.. பல வருட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை

Raghuvaran Revathi Mani Ratnam
By Dhiviyarajan Mar 01, 2023 03:00 PM GMT
Report

ஹீரோ, வில்லன் என இரண்டிலும் மாஸ் காட்டியவர் தான் நடிகர் ரகுவரன். ஆரம்பத்தில் மலையாள படத்தில் நடித்து வந்த இவர், 1982 வெளியான "ஏழாவது மனிதன்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். ரகுவரன் ஹீரோவாக பல படங்கள் நடித்திருந்தாலும் வில்லனாக நடித்ததே பெரும்பாலான மக்களுக்கு பிடித்தது.

இவர் 2008 -ம் ஆண்டு உடல் நிலை குறைவால் உயிரிழந்தார்.

படத்திற்காக அந்த மாதிரி செய்த ரகுவரன்.. பல வருட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை | Actress Revathi About Raghuvaran Acting

முட்டி போட்ட ரகுவரன்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "அஞ்சலி" படத்தில் ரகுவரன், ரேவதி ஆகியோர் நடித்திருப்பார்கள். சமீபத்தில் நடிகை ரேவதி, அஞ்சலி படத்தில் ரகுவரனுடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், " நடிகர் ரகுவரன் உயரமானவர். அஞ்சலி படத்தில் நடிக்கும் போது நாங்கள் அனைவரும் ஒரே ஃபிரேமில் தெரிய வேண்டும் என்பதற்காக முட்டி போட்டு நடித்தார். தமிழ் சினிமாவில் அவர் வெளிப்படுத்திய அழகான நடிப்பில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்" என்று கூறியுள்ளார்.  

படத்திற்காக அந்த மாதிரி செய்த ரகுவரன்.. பல வருட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை | Actress Revathi About Raghuvaran Acting