ஏ ஆர் ரஹ்மானை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்..ஆனா!! பிரபல நடிகை ஓபன் டாக்..
ஏ ஆர் ரஹ்மான்
இந்திய சினிமாவில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது பெத்தி, மூன் வாக், ராமாயணா பார்ட் 1 - பார்ட் 2, கில்லர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் ராமாயணா படம் உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹென்ஸ் சிம்மருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் பற்றி பிரபல நடிகை மோகினி பேட்டியொன்றில் கூறியது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதில் நடிகை மோகினி, நாம் ஏ ஆர் ரஹ்மானின் தீவிர ரசிகை. வெறித்தனமான அன்பு இருந்தது என்றே சொல்லலாம்.
நடிகை மோகினி
அவர் இஸ்லாமியத்திற்கு மாறியது, எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன். திலீப் என்ற பெயரே போதுமானதாக இருந்தது.
மதம் மாறாமல் இருந்திருந்தால் வீட்டில் இவரை எனக்கு பிடித்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு வசதியாக இருந்திருக்கும் என்று மோகினி அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.