சினிமாவில் வந்த புதிதில் நடந்த மோசமான அனுபவங்கள்.. நடிகை ரித்விகா வேதனை!!

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 17, 2024 05:05 AM GMT
Report

இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பரதேசி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார்.

முக்கியமாக இயக்குனர் பா.ரஞ்சித் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளை கொடுத்து வந்தார்.

சினிமாவில் வந்த புதிதில் நடந்த மோசமான அனுபவங்கள்.. நடிகை ரித்விகா வேதனை!! | Actress Riythvika Open Talk

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை ரித்விகா, சினிமாவில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், "நான் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் நிறத்தால் எனக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு போனது.

நேரடியாகவே சிலர் நாங்கள் இந்த படத்திற்கு கலராக இருக்கும் பெண்ணை தேடுகிறோம் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், அந்த படம் வெளிவந்து பின்னர், அந்த நடிகை ஏற்கனவே கலரா இருப்பார்.ஆனால் அவங்களையும் கலர் கம்மியாக நடிக்க வைத்திருப்பார்கள். அப்போ நமக்கு மனசு வலிக்கும்" என்று ரித்விகா தெரிவித்துள்ளார்.