நாய் பிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள்!..கையாலாகாத தனத்தை காட்டுகிறது! கண்ணீர் விட்டு அழும் நடிகை சதா..

Sadha Tamil Actress
By Edward Aug 15, 2025 04:30 AM GMT
Report

நடிகை சதா

டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகை சதா கண்ணீருடன் ஒரு வீடியோ பதிவிட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஒரேயொரு கேஸ், ரேபிஸ் மூலம் மரணம் ஏற்படாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பெண்ணுக்கு நடந்ததால் 3 லட்சம் நாய்களை பிடித்து அடைக்கப் போகிறார்களா? இல்லை கொல்லப் போகிறார்கள். நாய்களை எல்லாம் கொல்லப் போகிறார்களா? என்பதை நாம் ஏன் ஏற்கக் கூடாது.

நாய் பிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள்!..கையாலாகாத தனத்தை காட்டுகிறது! கண்ணீர் விட்டு அழும் நடிகை சதா.. | Actress Sadha Feels Sorry For Stray Dogs

8 வாரங்களில் அத்தனை நாய்களையும் பராமரிக்கும் அளவுக்கு அரசிடம் வசதி இல்லையா. நாய்களை மொத்தமாக கொல்லப் போகிறார்கள். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடாத அரசு மற்றும் லோக்கல் முனிசிபாலிட்டியின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.

பிரீட் நாய்களை வாங்கும் மக்கள் தெரு நாய்களை எடுத்து வளர்ப்பது இல்லை. உங்கள் வீட்டில் அழகான நாய்கள் இருக்க வேண்டும் என்கிற பேராசையால் தெரு நாய்கள் எல்லாம் தெரு நாய்களாகவே உள்ளன.

அதனால் உங்களை விலங்கு பிரியர்கள், நாய் பிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். தெரு நாய்களுக்காக அமைதியான முறையில் போராடுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள் என்று கடுமையாக பேசியுள்ளார் சதா.

இதற்கு பலரும் சாலையில் நடந்து செல்லாமல் கார்களில் மட்டும் செல்லும் ஆட்கள் தான் தற்போது தெரு நாய்களுக்காக குரல் கொடுக்கிறார்கள் என்று விமர்சித்து வருகிறார்கள்.