எனக்கும் அந்த கொடுமை நடந்திருக்கு! சினிமாத்துறையில் அதிகமாக இருக்கிறது.. நடிகை சதா

sadha torchlight jeyam
By Edward Jun 14, 2021 09:20 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சதா. தெலுங்கு நடிகையாக அறிமுகமாகி பின் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து நடிகர் விக்ரமிம் அன்னியன் படத்தில் நடித்தார்.

தமிழில் பெரியளவில் பேசப்படாமல் இருந்ததால் தெலுங்கு, மலையாளம் என சில படங்களில் நடித்தார். பல ஆண்டுகள் கழித்து, விபச்சாரம் பெண்ணாக டாட்ச்லைட் படத்தில் நடித்தார். பல படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய சதா அக்கதையை மூன்று முறை கேட்டு ஓகே என்று கூறியிருக்கிறார்.

மேலும் தனக்கு சினிமாவில் நேரடியாக காஸ்டிங் கவுச் பிரச்சனை வந்ததில்லை. ஆனால், ஒருசில போனில் தொடர்பு கொண்டு அணுகியிருக்கிறார்கள். அதை நான் கண்டுகொள்ளவில்லை. க்ளாமர் கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்து அப்படி கேட்டு இருக்கலாம். இன்னும் சினிமாத்துறையில் அந்த கொடுமை அதிகமாக இருக்கிறது என்றும் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் நடிகை சதா.