அனிருத்தின் அப்பா இப்படிப்பட்டவர் தான்.. மறுபக்கத்தை உடைத்த பிரபல நடிகை
தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களில் நடித்தவர் தான் நடிகை சாதனா. 170 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
வெள்ளித்திரையில் கலக்கி வந்த இவர் இப்போது சின்னத்திரையிலும் கலக்கி கொண்டு வருகிறார். கிட்டத்தட்ட 21 வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாதனா இசையமைப்பாளர் அனிருதின் அப்பாவுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அனிருத்தின் அப்பாவோடு நடித்து இருக்கிறேன். அவருடைய மகன் இவ்ளோ பெரிய ஆளாக வருவாய் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அனிருத்தின் அப்பா ரொம்பஹ அமைதியாக இருப்பார். நான் இங்க என்னுடைய வேலை செய்துகொண்டு இருந்தால், அவர் அவருடைய வேலையை செய்துகொண்டு இருப்பார். ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் செய்யாதவர் தான் அனிருத்தின் அப்பா என்று சாதனா கூறியுள்ளார்.