விருதுகளை விட அது தான் முக்கியம்.. ஓப்பனாக சொன்ன நடிகை சாய் பல்லவி
Sai Pallavi
Actress
Amaran
By Bhavya
சாய் பல்லவி
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை துவங்கி, இன்று இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார் சாய் பல்லவி.
இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் தண்டேல் திரைப்படம் வெளிவந்தது.
தென்னிந்திய சினிமாவில் கலக்கி கொண்டிருந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
சாய் பல்லவி ஓபன்
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகை சாய் பல்லவி சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " எனக்கு விருதுகளை விட ரசிகர்களின் அன்பு தான் மிகவும் முக்கியம். தியேட்டரில் ரசிகர்கள் என் கதாபாத்திரங்களை பார்த்து அந்த எமோஷன் உணர்வுகளுடன் தங்களை இணைத்து கொள்வதை தான் நான் என் உண்மையான வெற்றியாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.