வெறும் டவலுடன் வருங்கால கணவர் எடுத்த புகைப்படம்!! கட்டிப்பிடித்த நடிகை சமந்தா..
தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்தார். அதிலிருந்து மீண்டு வர தீவிர சிகிச்சைகளையும் வெளிநாட்டு மருத்துவத்தையும் செய்து வந்தார்.
மயோசிடிஸில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார். பாலிவுட் படத்தில் நடித்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி பல தொழில்களையும் நிறுவனங்களையும் ஆரம்பித்தும் வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் நடிகை தமன்னா வீட்டிற்கு சென்றுள்ள சமந்தா, படுக்கையறையில் அவருடன் கட்டியணைத்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தமன்னாவின் வருங்கால கணவர் வெறும் டவல் விஜய் வர்மா எடுத்துள்ளார்.

