பிரபல நடிகருடன் கில்லிகில்லி ஆட்டம் போட்ட நடிகை சமந்தா.. வீடியோ

Samantha Akshay Kumar Bollywood Pushpa: The Rise
By Edward Jul 20, 2022 07:16 PM GMT
Report

நடிகை சமந்தா கடந்த ஆண்டு கணவரை விவாகரத்து செய்து பிரிந்ததை அடுத்து புஷ்பா படத்தின் பாடல் ஒன்றுக்கு படுமோசமான குத்தாட்டம் போட்டது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வைரலானது.

இதனை தொடர்ந்து பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட நடிகைகளில் தென்னிந்திய நடிகையாக சமந்தா திகழ்ந்து வருகிறார். அந்தவகையில் விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக க்ளாமர் போட்டோஷூட் என்று நடத்தி ரசிகர்களை மிரட்டி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகரின், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சமந்தாவை அலேக்காக தூக்கியபடி ரொமாண்டிக் நடனம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து அக்‌ஷய் குமாருடன் ஊ அண்ட வா மாமா பாடலுக்கு கில்லிகில்லி ஆட்டம் போட்ட வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விவாகரத்துக்கு பின் கண்ட்ரோல் இல்லாமல் பாலிவுட் வாய்ப்பு கிடைத்ததும் ஆளே மாறிவிட்டார் என்று சமந்தாவின் செயலுக்கு கருத்துக்களை குவித்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.