மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் மாறிய முகம்!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சமந்தா...

Samantha Indian Actress
By Edward Jan 29, 2023 06:45 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதன்பின் சுதந்திர பறவையாக சினிமாவில் கிளாமர் ரூட்டை பயணித்து வரும் சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

தன்னால் எழுந்து கூட நடக்க முடியாத நிலை ஏற்பட்டு கஷ்டப்பட்டிருந்தேன் என்றும் அதற்கிடையில் படங்களில் நடித்து முடித்தேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் தன் பழைய நிலைக்கு மீண்டு வருகிறார். சமீபத்தில் தீராத ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்தார். தற்போது தன்னுடைய புதிய கண்ணாடி என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கிளோசப்பில் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முகம் வீங்கி அப்படியே மாறிவிட்டீங்களே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery