நம்ம சாம்-ஆ இது!! அவுட்டிங்கை எஞ்சாய் செய்யும் நடிகை சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து பின் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா.
அப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்தார். நாக சைதன்யாவை 2017ல் திருமணம் செய்து 4 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் பாதித்திருந்தது.
இதனால் பல மாதங்களாக கடுமையாக வலியை அனுபவித்து வந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
குஷி, சிடடெல் போன்ற படங்களின் ஷூட் முடிந்தப்பின் முழு சிகிச்சை மேற்கொள்ள வெளிநாட்டுக்கு செல்லவுள்ளார்.
தற்போது ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள இந்தோனேசியா சுற்றியிருக்கும் பாலி, Uluwatu போன்ற இடங்களுக்கு சென்று வருகிறார்.
அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன் பக்க ஈர்த்து வருகிறார் சமந்தா.



