ஆண் நண்பருடன் விமானத்தில் பயணம்!! நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வரும் சமந்தா, கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
இதற்கு காரணம் பலவிதமாக பேசப்பட்டு வந்த நிலையில், சமந்தா பல படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். இடையில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை மேற்கொண்ட போதிலும் படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார்.
தற்போது அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா, பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சார்ந்த பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்.
தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் ஆடை வடிவமைப்பாளருமான ப்ரீத்தம் ஜுகல்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படத்தோடு ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.
அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி பாய், The world is nicer place with you in it, god bless you I Love you என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே நாக சைதன்யாவை பிரிந்த போது ப்ரீத்தமுடம் காதலில் இருக்கிறார் சமந்தா என்ற செய்தி இணையத்தில் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

