நடிகை சமந்தா இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா!! அடேங்கப்பா

Samantha Actress
By Karthick Raja Apr 30, 2026 05:30 AM GMT
Report

சமந்தா

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக மா இண்டி பங்காரம் என்கிற திரைப்படம் வெளிவரவுள்ளது.

நடிகை சமந்தா இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா!! அடேங்கப்பா | Actress Samantha Ruth Prabhu Net Worth

இப்படத்தில் நடிகை சமந்தா ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த டீசரில் கூட ஆக்ஷனில் பட்டையை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக நட்சத்திரங்களின் லைஃப் ஸ்டைல், சொத்து மதிப்பு, சம்பள விவரம் குறித்து தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும்.

சொத்து மதிப்பு

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ. 110 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை சமந்தா இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா!! அடேங்கப்பா | Actress Samantha Ruth Prabhu Net Worth

மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 5 முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

சமந்தாவிடம் உள்ள சொகுசு கார்கள்

  • Land Rover Range Rover - ரூ. 2.26 கோடி
  • Porsche Cayman GTS - ரூ. 1.46 கோடி
  • Jaguar XF - ரூ. 72 லட்சம்
  • Mercedes Benz G63 AMG - ரூ. 3.63 கோடி
  • Audi Q7 - ரூ. 87 லட்சம்