2 முறை அபார்ஷன்!.கஷ்டத்தில் குற்றம் சுமத்திய நண்பர்கள்.. விஜய்யின் முன்னாள் காதலி வேதனை
நடிகர் அஜித் நடிப்பில் 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சங்கவி.
இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார். அப்போது விஜய் மற்றும் சங்கவி இருவரும் காதலித்தாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு ஐடி நிபுணரான வெங்கடேஷ் என்பரை திருமணம் கொண்டார். இவருக்கு பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் சங்கவி குறித்து சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சங்கவிக்கு முதல் குழந்தை உருவான 7 மாதத்தில் இதய துடிப்பு இல்லாததால் அபார்ஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்களாம். இதை கேட்ட சங்கவி அதிர்ச்சியில் மூழ்கினார். இதற்கு நெருங்கிய வட்டாரங்கள் பல விதமாக பேசினார்களாம்.
இதையடுத்து 2-வது முறையாக கர்ப்பம் தரித்த சங்கவிக்கு 8 வது மாதத்தில் இதை பிரச்னை ஏற்பட்டதாம். இந்த சமயத்தில் சங்கவி மிகுந்த மன உளைச்சலில் இருந்தாராம்.
மூன்றாவது முறையாக கர்ப்பமான சங்கவி கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது தனது மகளுடன் விளையாடும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.