கர்ப்பமாக இருந்த நடிகை சரிதா! வயிற்றில் உதைத்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரிதா. இவர் தனது முன்னாள் கணவர் முகேஷ் தனக்கு செய்த கொடுமைகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை பலருக்கும் கொடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய நடிகை சரிதா "இதையெல்லாம் நான் வெளியே சொல்ல வெட்கப்படுகிறேன். முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்து இருக்கிறேன். ஆனால், நிஜத்தில் அப்படி எனக்கு நடக்கும் என்று கனவில் கூட நினைத்தது இல்லை.

ஒரு முறை ஓணம் பண்டிகை வந்தது. அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன், பண்டிகை என்றாலே அனைவரும் மகிழ்ச்சியாக தானே இருப்போம். ஆனால், அந்த நேரத்தில் கூட முகேஷ் என்னுடன் சண்டை போட்டு என் வயிற்றில் எட்டி உதைத்தார்.

அப்போது வலியால் நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அதைப்பாத்து, நீதான் நல்ல நடிகையாச்சே, நல்ல நடிக்கிறாய் என சொல்லி சிரித்தார். அவர் எப்போ எப்படி இருப்பார் என சொல்லவே முடியாது" என பேசினார்.