கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்..

B Saroja Devi Death
By Kathick Jul 14, 2025 05:30 AM GMT
Report

சரோஜா தேவி

கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி.

இவர் கன்னடத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கினார். பின் தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்.. | Actress Saroja Devi Died

இதன்பின் அன்பே வா, ஆசைமுகம், ஆலயமணி , பார்த்திபன் கனவு, கல்யாபாரிசு, எங்கள் வீட்டு பிள்ளை என தொடர்ந்து பல ஹிட் படங்களை தந்தார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி இன்று காலமானார். அவருடைய வயது 87. உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்.. | Actress Saroja Devi Died

இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.