நட்சத்திர ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் திருமண தேதி... வெளிவந்த தகவல்
Tamil Cinema
Vijay Deverakonda
Rashmika Mandanna
By Yathrika
விஜய்-ராஷ்மிகா
நட்சத்திர ஜோடிகள் என்றாலே மக்களிடம் மிகவும் ஸ்பெஷல் தான்.
ஒரு ஜோடி நடித்த படம் படு ஹிட்டாகிவிட்டால் அவர்கள் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும் அல்லது நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.
அப்படி தான் ஒரு ஹிட் ஜோடி மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்து வருகிறார்கள். அவர்கள் வேறுயாரும் இல்லை விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி தான்.

கடந்த அக்டோபர் 3ம் தேதி மிகவும் சிம்பிளாக இவர்களது நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது, இருவரின் கையிலும் ஒரு புதிய மோதிரத்தையும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
ஆனால் இந்த ஜோடி தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் இருவரும் அடுத்த வருடம் பிப்ரவரி 26ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.