பார்த்திபன் சொல்றது பொய்!! விவாகரத்துக்கு காரணமே இதுதான் என உண்மையை உடைத்த நடிகை சீதா
90 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர், இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான "ஆண் பாவம்" என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் 100 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
திருமணம்
சீதாவும் நடிகர் பார்த்திபனும் 1990 -ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பின்னர் இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது முன்னாள் மனைவி சீதாவை பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளார். அதில் " என் முன்னாள் மனைவி சீதாவின் அதிக எதிர்பார்ப்பால் தான் எங்களுக்கு விவாகரத்து ஆனது.மேலும் முதலில் என்னிடம் காதலை சொல்லியது சீதா தான்" என்றார்.
பார்த்திபன் சொல்வது பொய்
அதற்கு பதில் அளித்த சீதா "கணவரிடம் அதிக எதிர்பார்ப்பு இருப்பதில் என தவறு இருக்கிறது. பார்த்திபன் சொல்லுவது பொய் அவர் தான் எனக்கு போன் செய்து அந்த மூன்று வார்த்தையை சொல்லச் சொல்வார். எனக்கும் அவரை பிடித்திருந்தால் நானும் காதலை சொல்லி விட்டேன்" என கூறினார்.