பிரபல இசையமைப்பாளரின் மகனுக்கு ஜோடியாகும் ருக்மிணி வசந்த்.. லேட்டஸ்ட் தகவல்

Rukmini Vasanth
By Kathick Oct 31, 2025 10:30 AM GMT
Report

கன்னட திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நாயகியாக மாறியுள்ளார் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 850 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பிரபல இசையமைப்பாளரின் மகனுக்கு ஜோடியாகும் ருக்மிணி வசந்த்.. லேட்டஸ்ட் தகவல் | Rukmini Vasanth Pair Up With Debut Actor Harsha

காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து ருக்மிணி வசந்த் அடுத்ததாக இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கப்போகிறாராம். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ருக்மிணி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் விரைவில் ஹீரோவாக ஹர்ஷவர்தன் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்க ருக்மிணி வசந்த் அப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல இசையமைப்பாளரின் மகனுக்கு ஜோடியாகும் ருக்மிணி வசந்த்.. லேட்டஸ்ட் தகவல் | Rukmini Vasanth Pair Up With Debut Actor Harsha

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. இதற்கு முன் தமிழில் Ace மற்றும் மதராஸி ஆகிய திரைப்படங்களில் ருக்மிணி வசந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.