உருகிஉருகி காதலித்த நடிகை ஸ்ருதியின் கணவர் மரணம்!! மனதை கனக்கவைத்த கடைசி வீடியோ..

Serials Viral Photos Tamil Actress Actress
By Edward Aug 04, 2023 04:07 AM GMT
Report

பிரபல சீரியலான நாதஸ்வரம் தொடரில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முக பிரியா. வாணி ராணி, கல்யாணப்பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் ஸ்ருதி, பாடிபில்டரும் உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி இருவரும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு பிரச்சனையால் இன்று மரணமடைந்ததாக செய்திகள் பரவியுள்ளது.

சமீபத்தில் தன் கணவருடன் இணைந்து ஒரு விளம்பர வீடியோவை எமோஷ்னலாக ரீல்ஸ் வெளியிட்டிருந்த நிலையில் அவரது கணவர் மரணம் சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

மேலும் இந்த சூழ்நிலையில் தனக்கு ஆறுதல் அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியும் கணவருடன் கடைசியாக மகிழ்ச்சியாக இருந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.

GalleryGallery