அத்துமீறிய இயக்குநர்.. உடை மாற்றும் போது நடந்த சம்பவத்தை உடைத்த ஷாலினி பாண்டே

Dhanush Shalini Pandey Actress
By Bhavya Apr 02, 2025 12:30 PM GMT
Report

ஷாலினி பாண்டே

திரையுலகில் பெரிய அளவில் படம் நடிக்கவில்லை என்றாலும், அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு அனைத்து மொழிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தமிழில் வெளியான கொரில்லா, 100% காதல், நிசப்தம் உள்ளிட்ட படங்களில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். தற்போது இவர் தமிழில் இட்லி கடை படத்தில் நடித்து வருகிறார்.

அத்துமீறிய இயக்குநர்.. உடை மாற்றும் போது நடந்த சம்பவத்தை உடைத்த ஷாலினி பாண்டே | Actress Shalini Pandey About Director

குற்றச்சாட்டு

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் ஒருவர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார் நடிகை ஷாலினி பாண்டே.

அதில், "கேரவனில் உடை மாற்றும் போது கதவை தட்டாமல் அந்த தெலுங்கு இயக்குநர் உள்ளே வந்தார். எனக்கு அப்போது 22 வயது தான். நான் கோபத்தில் அந்த இயக்குநரை வெளியே போகச் சொல்லி கத்தினேன்.

என்னுடைய அலறல் வேனில் மட்டுமல்ல, படப்பிடிப்புத் தளத்திலும் கேட்டது. பின் அந்த இயக்குநர் அங்கு இருந்து சென்றுவிட்டார்" என தெரிவித்துள்ளார்.   

அத்துமீறிய இயக்குநர்.. உடை மாற்றும் போது நடந்த சம்பவத்தை உடைத்த ஷாலினி பாண்டே | Actress Shalini Pandey About Director